செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தது அமலாக்கத்துறை.!!
enforcement department taken custody senthil balaji
உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது சரி என்று இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து அமலாக்கத் துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி அல்லி அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி வருகிற ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக புழல் சிறைக்கு விரைந்து சென்று நீதிமன்றத்தின் உத்தரவுகளை வழங்கியது.
அங்கு அனைத்து விதமான நடைமுறைகளும் முடிந்த பின்னர் செந்தில் பாலாஜியை பலத்த பாதுகாப்புடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
English Summary
enforcement department taken custody senthil balaji