ஆக.2ம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்ததும் மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் குறிப்பாக பொறியியல் படிப்புக்கு ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு நாளை முதல் ஜூன் 4ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 446 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்த நிலையில் வரும் மே 8-ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தற்போதே பல கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கிவிட்டது.

அந்த வகையில் பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில்பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதனிடையே சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் ஜூலை 12ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்  வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineering councelling starts from August 2


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->