EPass நாளை முதல் கட்டாயம்.. யாருக்கெல்லாம் தெரியுமா? முழு விவரம் இதோ.!!
Epass website officially starts working now
கோடைக்காலம் தொடங்கி விட்டதாலும் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டதாலும் மலை பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. இதனையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மலை பிரதேசங்களுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் நான் இது சுற்றுலா வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் என்பதால் அதற்கான இணையதளம் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் கட்டாயம் என்பது சுற்றுலாப் பயணிகளுக்கு இல்லை எனவும், வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே எனவும் தமிழக அரசு விளக்கம் அளத்துள்ளது.
இதனால் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க தேவையில்லை. அதேபோன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் இமெயில் முகவரியை வைத்து விண்ணப்பிக்க வேண்டும். இ-பாஸ் பெறுவதற்கான epass.tnega.org இணையதளம் இன்று காலை 6 மணி முதல் செயல்பட தொடங்கியுள்ளதால் சுற்றுலா வாகனங்கள் விண்ணப்பிக்கலாம்.
வெளி மாவட்ட, வெளி மாநில சுற்றுலா பயணிகள் தங்களின் மொபைல் எண்ணை வைத்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த நடைமுறையானது நாளை முதல் வரும் ஜூன் 30-ம் தேதி வரை பின்பற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
English Summary
Epass website officially starts working now