டி.ஜி.பி முதல் ஸ்டாலின் குடும்பம் வரை.. எத்தனை முறை சந்தித்தாரோ? - பகீர் கிளப்பும் ஈ.பி.எஸ்.!!
EPS ask TN DGP how many times met Jaffar Sadiq
அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு கேக் வெட்டி மகளிர் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்திகளை சந்தித்த அவரிடம் "ஜாபர் சாதிக் என்ற நபர் தொண்டு நிறுவனம் மூலம் சிசிடிவி கேமரா வழங்கும் போது அவரை சந்திக்க நேர்ந்தது என தமிழக டிஜிபி சங்கர் ஜீவால் விளக்கம் அளித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர் "தமிழக டிஜிபி என்ற உயர்ந்த பதவியில் இருப்பவர்கள். தன்னை சந்திக்க வரும் நபர்கள் யார், எப்படிப்பட்டவர் என்பதை விசாரித்து இருக்க வேண்டும். ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் சாதாரண மனிதர் கிடையாது. ஜாபர் சாதிக் குறித்து நன்கு விசாரித்து தான் அவருடன் பழகிய இருக்க வேண்டும்.
அவர் ஒரு முறைதான் பரிசுகொடுத்தாரா?எத்தனை முறை சந்தித்தார் என்பது யாருக்கு தெரியும்? வெளியில் வந்தது ஒரு தடவை தான். இது மிகப்பெரிய பிரச்சினை.
திமுகவின் நிர்வாகியாக இருக்கும் போது 2000 கோட் பதிப்பிலான போதைப் பொருளை கடத்தி இருக்கிறார். உடனே திமுக பொதுச் செயலாளர் அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குறார். இப்படி உயர் காவல் துறை அதிகாரிகள், முதலமைச்சர், விளையாட்டு துறை அமைச்சர், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் ஜாபர் சாதிக்கிற்கு பழக்க இருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இதற்கான விளக்கத்தை தமிழக முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என பதிலளித்தார்.
English Summary
EPS ask TN DGP how many times met Jaffar Sadiq