நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம் - பீதியில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


இமயமலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள நேபாளத்தின் காத்மண்டு நகரில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.1 ஆக பதிவாகி இருந்தது என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ஆனால் இதுவரைக்கும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. இதற்கு முன்பு, நேபாளத்தில் நேற்று முன்தினம் காலை 7.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது. இதன் தொடர்ச்சியாக மாலை 5.18 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி இருந்தது என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து இருந்தது.

கடந்த மூன்றாம் தேதி நேபாளத்தின் மேற்கு பகுதியில் இதேபோன்று ஒரு நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் டெல்லி-என்.சி.ஆர். பகுதியிலும் உணரப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erathquake in nepal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->