சுட்டெரிக்கும் வெயில்: தூய்மை பணியாளர்களின் பணி நேரம் மாற்றம்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்து செல்ல நாட்களாக 108 டிகிரி முதல் 110 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இதனால் பகல் நெரங்களில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர். அதேபோல் வெப்ப அலை வீசுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பேருந்தில் செல்பவர்களும் காடும் அவதி அடைந்துள்ளனர். 

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். இந்த சுட்டெரிக்கும் வெயிலில் ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் காலை முதல் மாலை வரை தூய்மை பணியை மேற்கொள்கின்றனர். 

இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் மதிய நேர பணிகள் ரத்து செய்யப்பட்டு அவர்களது பணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பணி நிறம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode cleanliness workers working hours Change 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->