#BREAKING | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
Erode East By Poll 11 am
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் அச்சமில்லாமல் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பிட உள்ளது.
சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி தற்போது வாக்கு என்னும் மையமான செயல்பட உள்ளது. அங்கு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குப்பதிவு நடந்துள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை 63,469 பேர் வாக்களித்துள்ளனர்.