பள்ளி மாணவியின் கருமுட்டை திருட்டா? தமிழகத்தில் புதுவிதமான ஒரு திருட்டு., கள்ளக்காதலன் சையது அலி உள்ளிட்ட 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் புதுவிதமான ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 16 வயது சிறுமி ஒருவரின் கருமுட்டைகளை திருட்டுத்தனமாக எடுத்து விற்பனை செய்த, சிறுமியின் தாய், அவரின் கள்ளக்காதலன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் பிரபல கருத்தரிப்பு மருத்துவமனையில் சிறுமி ஒருவரை அழைத்துச் அழைத்துச் செல்லப்பட்டு, சிறுமியின் கருமுட்டை தானம் செய்யப்பட்டு, பணம் பெறப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து இந்திராணி என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், இந்திராணி தனது இரண்டாவது கணவர் (கள்ளக்காதலன் என்றும் சொல்லப்படுகிறது) சையது அலியுடன் சேர்ந்து, முதல் கணவருக்கு பிறந்த 16 வயது சிறுமிக்கு, போலியான வயது அடையாள அட்டை தயாரித்து, அதன் மூலம் கருத்தரிப்பு மையங்களில் பலமுறை கருமுட்டைகளை தானமாகக் கொடுத்து, பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இந்திராணி, அவரது இரண்டாவது கணவர் சையது அலி இருவரையும் கைது செய்த போலீசார், கருமுட்டைகள் தானமாக கொடுத்து பணம் பெற்றுத்தர புரோக்கர் வேலை செய்த மாலதி என்பவரையும் கைது செய்தனர் மேலும், மூன்று பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே மேலும் இந்த சம்பவம் குறித்து வெளியான ஒரு தகவலின் படி, இந்திராணி அவரது இரண்டாவது கணவர்  சையது அலி ஆகியோரின் கொடுமை தாங்கமுடியாமல், அந்த சிறுமி வீட்டில் இருந்து தப்பித்து சேலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்து உள்ளதும், பின்னர் தனது உறவினர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவர் எடுத்துக் கூறியதால் இந்த உண்மை தற்போது வெளிவந்துள்ளது என்று அந்த தகவல் தெரிவிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode some difficult robbery case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->