#ஈரோடு || ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் "30 நிமிடம்" அணைந்த சிசிடிவி.. பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வரும் ஜூன் நான்காம் தேதி நாடு முழுவதும் ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் அந்தந்த மாவட்டத்தில் அமைந்துள்ள வாக்கு என்னும் மையங்களில் மூன்றெழுத்து போலீஸ் பாதுகாப்புடன் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பின் நடுவே வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே ஈரோடு தொகுதிக்கான வாக்குகள் சித்தோடு பொறியியல் கல்லூரியில் தனி அறையில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் 220க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று இரவு சுமார் 30 நிமிடங்கள் அனைத்து சிசிடிவி கேமராக்களும் பழுதாகி நின்றுள்ளன.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பழுது ஏற்பட்ட சிசிடிவி கேமரா உடனே சரி செய்து விட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் விளக்கம் அளித்துள்ளார். இதேபோன்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் இருந்த சிசிடிவி கேமராக்களும் திடீரென பழுதாகி நின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode voting machine store room cctv camera 30mins not working


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->