அப்படிப்போடு! அதிமுக மீண்டும் ஒன்றிணைகிறதா? இப்படி ஒரு டிவிஸ்ட யாரும் எதிர்பார்க்கலயே...! - Seithipunal
Seithipunal


"மறப்போம், மன்னிப்போம் என்ற மாபெரும் தத்துவத்தை மனதில் கொண்டு ஒன்றுபட வேண்டும்" என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகிய நால்வருக்கும் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு கடிதம் எழுதியுள்ளது.

அதிமுக முன்னாள் நிர்வாகிகளான ஜே.சி.டி.பிரபாகர், கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகியோர் தலைமையிலான அதிமுக ஒருங்கிணைப்புக் குழு எழுதியுள்ள அந்த கடிதத்தில், "ஏழை எளிய மக்களின் வாழ்விற்காக மக்களின் பெருவாரியான ஆதரவோடும், எழுச்சியோடும், தீயசக்தியின் தடைகளைத் தகர்த்தெறிந்து யுத்த களத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த மாபெரும் இயக்கம் வெற்றிகளை மட்டுமே கண்டதையும் தொடர்ந்து புரட்சித் தலைவர் அவர்களின் அரசியல் வாரிசு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தன்னிகரற்ற ஆளுமையால் பரிணாம வளர்ச்சியில் பல வெற்றிகளை கண்டு சாதனை படைத்ததையும் தாங்கள் அறிவீர்கள். 

எனக்கு பின்னாலும் பல நூற்றாண்டு காலம் இந்த இயக்கம் நிலைத்திருக்கும், வெற்றி வாகை சூடும் என்கிற தாரக மந்திரத்தை நம்மை அரசியலில் அடையாளம் காட்டி வளர்த்த அன்னை முழங்கியதை நாம் என்றும் மறவோம். 

இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் மறைவிற்கு பின்னால் நம்மிடம் ஒற்றுமை ஏற்பட்டு மீண்டும் பிளவு ஏற்பட்டது. ஆனால் இப்பொழுது தோல்விகள் தொடர்கிறது. 

மறப்போம், மன்னிப்போம் என்கிற மாபெரும் தத்துவத்தை அனைவரும் மனதில் கொண்டு ஒன்று பட வேண்டும். என்கிற உயரிய எண்ணமே. எங்களது வேண்டுகோள் பிளவு பட்டு இருந்த இயக்கத்தை மன கசப்புகளை மறந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களும் திருமதி ஜானகி அம்மையார் அவர்களும் ஒருங்கிணைத்ததை நினைவு கூர கடமைபட்டுள்ளோம்.

மீண்டும் புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி ஆகியோரின் ஆட்சி தமிழகத்தில் அமைய செம்மையாக பணியாற்றுவோம் என்கின்ற தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒற்றுமை வேண்டி தங்களை நேரில் சந்திக்க விரும்புகிறோம். இதனை தாங்கள் வரவேற்பீர்கள் என்று நம்புகிறோம். 

ஒற்றுமை வேண்டும் என்கிற இந்த செயல்பாட்டினை கடமையாக கொண்டு செயல்படுகிறோம். பொதுவானவர்களாக நின்று ஒருங்கிணைக்கும் பணியில் மட்டுமே எங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம். பொதுமக்களும் தொண்டர்களும் இதைத்தான் வலியுறுத்தி வருகிறார்கள் என்பதனை அன்புடன் தெரிவித்து தங்களிடம் மேலும் பல கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் தங்களின் ஆலோசனைகளை பெறவும் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே என்கிற உன்னதமான வரிகளை முன்னிறுத்தி கழகத்தை காக்க தங்களின் அழைப்பை எதிர்நோக்கி உள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EX ADMK And ADMK Heads Again in one team


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->