புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு தரும்! புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ஆயுளில் 20 நிமிடம் குறைகிறது - ஆய்வில் வெளியான அதிர்ச்சி உண்மை!
Smoking is harmful to health Every cigarette you smoke cuts your life by 20 minutes study reveals shocking truth
இங்கிலாந்து அரசின் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை மேற்பார்வையில், லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (UCL) நடத்திய ஆய்வில், சிகரெட் புகைபிடிக்கும் ஒவ்வொரு நபரும் தங்கள் வாழ்நாளில் நேரத்தையும் ஆரோக்கியத்தையும் எவ்வாறு இழக்கின்றனர் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சிகரெட்டும் மனித வாழ்நாளில் சராசரியாக 20 நிமிடங்களை குறைக்கிறது.20 சிகரெட்டுகளைக் கொண்ட ஒரு பாக்கெட் புகைபிடிப்பதால் சுமார் 7 மணி நேர வாழ்நாளை இழக்கின்றனர்.
ஆண்கள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் 17 நிமிடங்களையும், பெண்கள் 22 நிமிடங்களையும் இழக்கிறார்கள்.நீண்ட காலமாக புகைப்பழக்கத்தில் இருப்பவர்களுக்குத் தங்கள் வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைவாக இருக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
UCL ஆராய்ச்சியாளர் டாக்டர் சாரா ஜாக்சன் கூறுகையில்:மக்கள் புகைபிடிப்பால் ஏற்படும் விளைவுகளை அறிந்திருந்தாலும், அதன் ஆழத்தை சரியாக புரிந்து கொள்வதில்லை.
குறிப்பாக, புற்றுநோய் மற்றும் இதய நோய்களால் ஏற்படும் இறப்புகளில் கால் வாசி சிகரெட் பழக்கத்தால் தான் உருவாகிறது.
இங்கிலாந்து சுகாதாரத் துறை, மக்களை 2025ஆம் ஆண்டிற்குள் புகைபிடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வலியுறுத்தி வேலை செய்து வருகிறது.
புத்தாண்டில் இருந்து பிப்ரவரி 20 வரை புகைபிடிக்காமல் இருந்தால், வாழ்நாளில் ஒரு வாரம் இழப்பதை தவிர்க்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஆண்டின் இறுதிவரை புகைபிடிக்காமல் இருந்தால், 50 நாட்கள் வாழ்நாளைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.
நீண்ட கால புகைப்பழக்கத்தில் மூன்றில் இரண்டு பேர் வரை இறக்கின்றனர்.இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் சிகரெட் புகைப்பதால் 80,000 பேர் மரணம் அடைகிறார்கள்.
இந்த ஆய்வு, பொதுமக்களுக்கு புகைபிடிப்பு பற்றிய உண்மைகளை தெளிவுபடுத்தி, அவர்களை இந்த பழக்கத்திலிருந்து மீட்க உதவுவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. வாழ்நாளை நீடிக்க விரும்பினால், புகைபிடிப்பை நிறுத்துவது அவசியம் என அரசும் ஆராய்ச்சியாளர்களும் வலியுறுத்துகிறார்கள்.
English Summary
Smoking is harmful to health Every cigarette you smoke cuts your life by 20 minutes study reveals shocking truth