முன்னாள் டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி
Ex-DGP sentenced to 3 years in jail
விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2023, ஜூன் 16-ஆம்தேதி பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ் தாசுக்கு இரு பிரிவுகளின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை வழங்கியது. இதனை எதிர்த்து முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு செய்தார். விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த ராஜேஷ்தாஸ் மனுவை ஜனவரி 9 ஆம் தேதி சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது
டிஜிபி ராஜேஷ்தாஸ் பல முறை ஆஜராகாத நிலையில், அவரது வக்கீல் ஆஜராகி, வாதிட கால அவகாசம் கோரினார். ஆனால், நீதிமன்றம் மறுத்து விட்டது. பிப்ரவரி 1-ஆம் தேதி ராஜேஷ்தாஸ் நேரில் கண்டிப்பாக
ஆஜராக உத்தரவிட்டது.
இதையடுத்து பிப்ரவரி 1-ஆம் தேதி விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் ஆஜரானார். அவருடைய தரப்பு வாதங்களை முன்வைத்து ராஜேஷ்தாசே வாதாடினார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 7-ஆம் தேதி வரை உத்தரவிட்டார்.
முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.
English Summary
Ex-DGP sentenced to 3 years in jail