''62 பேரின் ஆன்மாக்கள்'' இவர்களை சும்மா விடாது - பகீர் கிளப்பிய ஜெயக்குமார்.!
Ex minister Jayakumar speech
கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்க தவறியதாக தெரிவித்தும் தி.மு.க அரசை கண்டித்தும் கள்ளச்சாராயம் மரணத்திற்கு முதலமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வலியுறுத்தியும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு இடையே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது,
தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் கள்ளச்சாராய உயிரிழப்புகள், போதைப்பொருள் நடமாட்டம் போன்றவை தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது.
கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். 150 கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரும் கண்பார்வை இழந்துள்ளனர்.
கடந்த முறை கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்ட பொழுது இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என முதல்வர் பேசிய நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மருந்து இல்லை என தெரிவித்து பின்னர் மும்பைக்குச் சென்று மருந்துகளை வாங்கி வந்தனர்.
மடியில் கனமில்லை என்றால் இதை சிபிஐக்கு மாற்றலாம்? சிபிஐக்கு மாற்றினால் ஆளும் கட்சியினர் பலரும் இந்த விவகாரத்தில் மாட்டுவார்கள். ஒரு நபர் ஆணையம் கண்துடைப்புக்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 16 பேரின் ஆன்மாக்கள் அமைச்சர் மா. சுப்பிரமணியத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் சும்மா விடாது. வருகின்ற 2026 ஆம் ஆண்டு ஸ்டாலினை மக்கள் நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்து விடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
English Summary
Ex minister Jayakumar speech