சினிமா பாணியில் தேர்வெழுத சென்ற வாலிபர்! கையும் களவுமாக பிடிபட்ட சமபவம்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி, ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரிகளில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் நடைபெற்றது. 

இந்த தேர்வு எழுத 4591 பேர் விண்ணப்பித்தனர். அதில் 3559 பேர் தேர்வு எழுதினர். பொது அறிவு தேர்வு காலையிலும், தமிழ் தேர்வு மதிய நேரத்தில் நடைபெற்றது. 

இந்நிலையில் பொது அறிவு தேர்வை அனைவரும் எழுதிக் கொண்டிருந்த போது திடீரென தேர்வு அறையில் சத்தம் கேட்டது. 

உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர்களை சோதனை செய்தனர். அப்போது தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் சினிமா பாணியில் முகக் கவசத்தில் வாய்ஸ் ட்ரான்ஸ்மீட்டர் எனும் கருவியை மறைத்து வைத்து வெளியில் இருந்து தகவலை அறிந்து தேர்வு எழுதியது அம்பலமானது.

இதனை அடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பச்சியூரை சேர்ந்த நவீன் (வயது 26) என்பது தெரிய வந்தது. 

மேலும் அவருடைய உறவினர் ஒருவர் வெளியில் இருந்தபடி செல்போன் மூலம் நவீன் தேர்வு எழுத உதவி செய்தது தெரியவந்தது. 

இதனை அடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவித்திருப்பதாவது, ஆன்லைன் மூலம் மிகச் சிறிய வாய்ஸ் ட்ரான்ஸ்மீட்டரை வாங்கி அதனை கருப்பு நிற முக கவசத்தில் வைத்து அதை அணிந்த பாடி தேர்வு எழுதியுள்ளார். 

ஆனால் வாய்ஸ் ட்ரான்ஸ்ஃபர் மீட்டரில் இருந்து வந்த சத்தம் அவரைக் காட்டி கொடுத்து விட்டது என்றார். இதனால் மதியம் நடந்த தேர்வில் அனைத்து தேர்வர்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

exam write teenager went style of cinema


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->