கனமழையின் காரணமாக தேர்வுகள் ஒத்திவைப்பு.!!
Exams postponed in TN due to heavy rain
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக கன முதல் மிக கனமழை வரை செய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேற்று இரவு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்த நிலையில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் நவம்பர் 16ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த பட்டய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஐடிஐ மாணவர்களுக்கான இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதோடு தேர்வுகளுக்கான மாற்று தேதி dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Exams postponed in TN due to heavy rain