மின்சார ரெயில் சேவையில் திடீர் மாற்றம் - சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்.!
extra buses run in chennai for electric train service time change
சென்னையில் கடற்கரையிலிருந்து தாம்பரம் செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில்கள் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மறு அறிவிப்பு வரும் வரை கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் நலன் கருதி மேற்குறிப்பிட்டுள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில்கள் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மறு அறிவிப்பு வரும் வரை கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் நலன் கருதி வழக்கமாக மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக தாம்பரம் முதல் பிராட்வே வரை கூடுதலாக 10 பேருந்துகளும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 5 பேருந்துகளும், கூடுவாஞ்சேரி முதல் தி.நகர் வரை 5 பேருந்துகள் என்று மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து, இந்த கூடுதல் பேருந்துகளின் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
extra buses run in chennai for electric train service time change