அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலமா? தர்மபுரியில் பதற்றம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பனைக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் 126. மாணவர்கள் பயின்று வரும் நிலையில் மாணவர்கள் பயன்படுத்திய குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசியதாக ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளனர். இந்த நேரத்தில் பள்ளி ஆசிரியர்கள் சோதனை செய்தபோது அதில் மலம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பட்டதாரி அடிப்படையில் பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் கலந்திருப்பது மனித கழிவு அல்லது விலங்குகளின் கழிவாய் என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்திய குடிநீர் தொட்டியில் மலம் கலந்து விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த சம்பவத்தில் தற்போது வரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்த நிலை தற்போது வேங்கை வயலை மிஞ்சும் வகையில் தர்மபுரி அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கடந்து விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

faces in dharmapuri govt school drinking tank


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->