விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெல்வதில் காட்டும் அக்கறையை..சிறிதளவாவது கள்ளச்சாராய விற்பனை தடுப்பதில் காட்ட வேண்டும் - சீமான்!! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெல்வதில் காட்டும் அக்கறையை, அவசரத்தையும் சிறிதளவாவது, கள்ளச்சாராய விற்பனை தடுப்பதில் காட்ட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அறிந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 தாண்டி தொடர்ந்து அதிகரித்து வருவது ஆற்ற முடியாத மனதுயரத்தையும் கவலையும் அளிக்கிறது. 

கலாச்சாராயம் குடித்து 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கும் அளவிற்கு மிக மோசமான சூழல் நிலவும் நிலையில் உயிரிழப்புக்கு கள்ளச்சாராயம் காரணம் இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்தது எப்படி? திமுக அரசு சிறிதும் மனசான்று இன்றி வெவ்வேறு உடல் உபாதைகளாலே உயிரிழப்பு நிகழ்ந்தது என்று கூறி கள்ளச்சாராயம் மரணங்களை மூடி மறக்க முயன்றது வெட்கக்கேடானது.

கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிகழ்ந்த கலாச்சாராயம் மரணங்கள் குறித்து விசாரிக்க திமுக அரசு நியமித்த சிபிசிஐடி விசாரணை என்னானது? அதன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அதன் பிறகும் தற்போது மீண்டும் கள்ளச்சாராயத்தால் இத்தனை உயிர்கள் பலியாகி இருக்கிறது என்றால் சிபிசிஐடி விசாரணை என்பது மக்களின் மனக்கொந்தளிப்பை அடக்க மேற்கொள்ளப்படும் ஒரு கண்துடைப்பு நாடகம்தான் என்பது தெளிவாகி இருக்கிறது.

காவல்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெல்வதில் காட்டும் அக்கறையும், அவசரத்தையும் சிறிதளவாவது கள்ளச்சாராய விற்பனை தடுப்பதில் காட்ட வேண்டும் என்றும்  இனியும் இது போன்று மதுவினால் மனித உயிர்கள் மலினமாக பறிபோவதை தடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fake Alcohol should be eliminated Seeman


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->