கள்ளச்சாராயம் விற்பவர்களை என்கவுண்டரில் போடணும்! அப்போதான் மத்தவங்களுக்கு பயம் வரும் - கே.சி கருப்பண்ணன்!
fake liquor seller Encounter
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ கே.சி கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. கள்ளச்சாராயம் கொடுத்து பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கண்டித்து இன்று ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கே.சி கருப்பண்ணன், கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தபோது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அன்றைய தினமே நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது கள்ளச்சாராய காரணமாக உயிர் இழப்பு நிகழ்ந்து இருக்காது. அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்து விடும் என்ற எண்ணத்தில் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளச்சாராயம் மூலம் இவ்வளவு உயிரிழப்புக்கு திமுக அரசு தான் காரணம்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதற்கு பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட ஒழுங்கு பிரச்சனை காப்பாற்ற சாராயம் தயாரித்த நபர்கள் மீது நிறைய வழக்குகள் இருப்பதால் அவர்களை என்கவுண்டரில் போடுங்கள். அப்போதுதான் மற்றவர்களுக்கு பயம் வரும் என தெரிவித்துள்ளார்.
English Summary
fake liquor seller Encounter