வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த டுபாக்கூர் போலீஸ் கைது..!! பொய் சொல்லி திருமணம் செய்ததும் அம்பலம்..!!
Fake police arrest involved in vehicle inspection
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையம் அடுத்த கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக சென்ற கருதம்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் சர்வீஸ் சாலையில் காவல் உதவி ஆய்வாளர் போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தவரை பார்த்துள்ளார்.
அவருடைய செயலில் சந்தேகம் எழுந்ததை அடுத்து சிவகுமார் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உதவி ஆய்வாளர் உடையில் இருந்த நபரை விசாரித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணைக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் விருதுநகர் மாவட்டத்தை அடுத்த மல்லங்கிணறு கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்தது. தெக்கலூரில் உள்ள தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இவர் தெக்கலூரில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருவதும், காவல் உதவி ஆய்வாளர் என பொய் சொல்லி ஒரு பெண்ணையும் திருமணம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். இதே அவிநாசி சாலை வழியாக சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் திருப்பூருக்கு பயணம் செய்த போது செல்வம் பாதுகாப்பு அதிகாரியாக அங்கு பணியில் இருந்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
Fake police arrest involved in vehicle inspection