பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்!
Famous writer indira soundarrajan passed away
புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இன்று காலமானார். மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் குளித்துக் கொண்டிருந்த போது, வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், எழுத்தளார்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்திரா சௌந்தர்ராஜனின் படைப்புகளான என் பெயர் ரங்கநாயகி, மர்ம தேசம் உள்ளிட்ட படைப்புகள் முன்னணி தொலைக்காட்சிகளில் தொடர்களாக வந்துள்ளது. மேலும் இவர், சிருங்கரம், அனந்த புரத்து வீடு ஆகிய பெண்களுக்கு திரைக்கதையும் எழுதி உள்ளார்.
மேலும், இந்து மதம், புராண இதிகாசங்கள் ஆகியவற்றை கலந்து எழுதுவதில் இந்திரா சௌந்தர்ராஜன் சிறந்த வல்லவராக விளங்கி உள்ளார். இவரின் என் பெயர் ரங்கநாயகி படைப்பு 1999-ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சி துறையில் சிறந்த புதினங்களில் மூன்றாவது பரிசினை பெற்றுள்ளது.
தொலைக்காட்சி தொடர் மற்றும் திரைத்துறையில் இவரின் பங்களிப்பு எண்ணற்றவை. இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பாக இவரின் உடலுக்கு மரியாதை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Famous writer indira soundarrajan passed away