வீடு கட்ட லஞ்சம் கேட்ட அதிகாரிகள்.. ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற விவசாயி..!
Farmer attempted Suicide
பிரதமந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கான நிதி வழங்க லஞ்சம் கேட்டதால் விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கண்டம்பாக்கம் கிராமத்தை சார்ந்த விவசாயி ஞானசேகரன். கடந்த 8.12.2022 ஆம் தேதி உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி கையால் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கியுள்ளார்.
வீடு முழுவதுமாக கட்டப்பட்ட நிலையில் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் மற்றும் ஒன்றிய பணி மேற்பாளையர் குப்புசாமி ஆகியோர் இதுவரை 30 ஆயிரம் லஞ்சமாக பெற்ரு கொண்டு மேலும் 10 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர்.
அந்த பணத்தை தரவில்லை என்றால் நிதி ஒதுக்கீடு இயலாது என கூறியுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
பாதுக்காப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர் அவரை மீட்டு அழைத்து சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.