கிருஷ்ணகிரியில் பெரும் சோகம்.. அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த விவசாயி உயிரிழப்பு..!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஊராட்சிகளில் 5வது சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு 3034 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக் கோரியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் உத்தனப்பள்ளியில் விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுடன் வருவாய் துறையினர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.

வருவாய்த் துறையினருடன் விவசாயிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு கட்டப்படாததால் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காத்திருப்பு போராட்டம் 150வது நாளை எட்டிய நிலையில் கடந்த 3 நாட்களாக விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். விவசாயிகள் அனைவருமே தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த உண்ணாவிரதம் போராட்டக்களத்தின் போது மயங்கி விழுந்த அன்னையா என்ற விவசாயி சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmer dies in hunger strike against SIPCOT


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->