நீலகிரி மாவட்டம் போகும் மக்கள் கவனத்திற்கு: இ-பாஸ் கண்காணிப்பு - மாவட்ட ஆட்சியரின் பேட்டி!
Fasttag Nilagiri
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களின் இ-பாஸ் கண்காணிப்பு மற்றும் பசுமை வரி வசூலை தானியங்கி முறையில் செய்ய விரைவில் நவீன கேமராக்களுடன் கூடிய பாஸ்டாக் முறை அறிமுகப்படுத்தப்படும் என, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
வார இறுதி மற்றும் தொடர் விடுமுறைகளில் நீலகிரிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவதால் இ-பாஸ் கண்காணிப்பு மற்றும் பசுமை வரி வசூலில் தாமதம் ஏற்படுகிறது. இதன் விளைவாக மாவட்ட எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.
இந்த நெரிசலை குறைக்கவும், இ-பாஸ் நடைமுறையை துல்லியமாகக் கண்காணிக்கவும் நவீன தொழில்நுட்ப அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களின் இ-பாஸ் கண்காணிப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.