மயிலாடுதுறை அருகே அதிர்ச்சி சம்பவம்..! மகளையே கர்ப்பமாக்கிய தந்தை கைது...! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை அருகே மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 41 வயது கொத்தனார். இவரது மகள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் கடந்த மூன்று வருடங்களாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இளம்பெண் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் இளம்பெண் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் இளம் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், விடுமுறைக்காக தம்பி, தங்கைகளை அழைத்துக் கொண்டு தாயார் திருவண்ணாமலையில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றபோது மது போதையில் வீட்டிற்கு வந்த தந்தை, மகள் என்று கூட பாராமல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் துறையினர், இளம் பெண்ணின் தந்தையை கைது செய்தனர். இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father arrested for pregnating a daughter in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->