அம்மாவையும் தங்கையையும் கொன்றுவிடுவேன்.. மகளை மிரட்டி பாலியல் தொல்லை அளித்த கொடூரன்..! - Seithipunal
Seithipunal


பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

 விருதுநகர் மாவட்டம் அல்லல் பட்டி பகுதியில் தம்பதி இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர்.  அவரது முதல் மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு இரண்டாவது மகள் எட்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி வகுப்பறையில் சோகமாக இருந்துள்ளார். இதனை கவனித்த ஆசிரியர் அவரது நோட்டை வாங்கிப் பார்த்த பொழுது :இனியும் வாழ கூடாது” என எழுதி இருந்தால் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து மாணவியிடம் கேட்டுள்ளார். அதற்கு தனக்கு வாழ விருப்பமில்லை என அந்த மாணவி தெரிவித்திருக்கிறார். மேலும் தந்தையை பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியர் உடனடியாக இதுபற்றி தெரிவித்தார்.

காவல்துறையில் புகார் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அந்த மாணவியின் பெற்றோர் இருவரும் காலையிலேயே வேலைக்கு சென்று விடுவர். இந்நிலையில் அந்த மாணவி உடல்நிலை சரியில்லாதபோது பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

அந்த நேரங்களில் அவரது தந்தையும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து மகள் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் இரவில் தாய் மற்றும் தங்கை உறங்கியதும் மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

மறுப்பு தெரிவித்தால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், இதுகுறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் தாய் மற்றும் தங்கையை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதற்கு பயந்து அந்த சிறுமியும் இதுபற்றி தாயிடம் கூறாமல் இருந்து வருகிறார்.

இதனையடுத்து அந்த கொடூர தந்தை மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் பாலியல் குற்றம் புரிந்த தந்தை அமிதை குண்டாஸ் சட்டம் போட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father arrested for sexually abusing daughter near viruthunaagaar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->