தேனி : மனைவியை அழைக்கச் சென்ற இடத்தில் கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!
father in law attack son in law in theni
தேனி : மனைவியை அழைக்கச் சென்ற இடத்தில் கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!
தேனி மாவட்டத்தில் உள்ள கண்ணாத்தாள் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் கந்தன்ராஜன் - சூர்யகலா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கந்தன் ராஜனுக்கும், அவரது மனைவி சூர்யகலாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தத் தகராறு இருவருக்கிடையே கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யகலா தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனால் தனியாக இருந்த கனகராஜன் மாமியார் இல்லத்திற்குப் போய் சமாதானம் பேசியுள்ளார்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பும் ஆனது. அப்போது கந்தன் ராஜனை, சூர்யகலாவின் தந்தை உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் தாக்கி அவரது செல்போன், நகை மற்றும் அவரிடம் இருந்த இரண்டு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கந்தன்ராஜன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீஸார் கனகராஜன் உள்பட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமாதானம் பேச போன இடத்தில் மருமகனின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
father in law attack son in law in theni