ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி.. பச்சிளம் குழந்தையை கொன்ற கணவன்.. ராணிப்பேட்டை அருகே நடந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் தோல்ஷாப் பகுதியை சேர்ந்த மனோ. இவருக்கு திருமணமாகி அம்சநந்தினி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவர் நடு இரவில் தூங்கி கொண்டிருந்த போது குழந்தையை காணாததால் அதிர்ச்சியடைந்தனர்.

அக்கம்பக்கதில் குழந்தையை தேடும் போது வீட்டின் குளியலறையில் 20 லிட்டர் பெயிண்ட் பக்கெட்டில் உள்ள நீரில் குழந்தை தலைகீழாக இருப்பது தெரியவந்தது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாராணையில் தந்தையே குழந்தையை கொன்றது தெரியவந்தது. சம்பவதன்று இரவு மதுபோதையில் மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.

அதற்கு அம்சநந்தினி மறுக்கவே ஆத்திரத்தில் குழந்தையை எடுத்துச்சென்று நீர்நிறைந்த பக்கெட்டியில் குழந்தையை அமுக்கி கொலை செய்துள்ளார். இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father killed his Child


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->