விருதுநகர் | சொத்துக்களை விற்ற தந்தையை கொன்ற மகன்! சிறையில் அடைத்த போலீசார்! - Seithipunal
Seithipunal


ராஜபாளையம் அருகே சொத்து விற்றதால் தந்தையை கொன்ற மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்:

விருதுநகர்: ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 73). இவருக்கு கடல்கனி என்ற மகனும், நான்கு மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 

கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் கடல்கனி ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். கடல்கனி நேற்று முன்தினம் தனது தந்தையை நெல்லைக்கு பேருந்தில் அழைத்து சென்று, வண்ணார்பேட்டை பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே வைத்து தந்தையை கொலை செய்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பெற்ற மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. அதனை அடுத்து கடல்கனியை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். 

அவர் கேரளாவில் வியாபாரம் செய்வதால் அங்கு சென்றிருக்கலாம் என போலீசார் அங்கு சென்று முகாம் அமைத்து தேடிவந்ததில் நேற்று இரவு கொட்டாரக்கரையில் கடல்கனியை கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். 

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், எனது தந்தை இதற்கு முன்னரே அவர் பெயரில் இருந்த ஒரு சொத்தை விற்றுவிட்டார். தற்போது மற்றொரு சொத்தையும் விற்கப்போவதாக தெரிவித்தார். 

இதனால் கோபமடைந்தும் அதே நேரத்தில் அவர் வயதானவர் என்பதால் நோய் வாய்ப்பட்டு ஒவ்வொரு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று வெறுப்பாகிவிட்டது. எனவே ஆத்திரத்தில் கொலை செய்து விட்டேன் என்றார். 

இதனை போலீசார் வாக்கு மூலமாக பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father murder case arrested son


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->