#கன்னியாகுமரி : 14 வயது சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய 3 குழந்தைகளின் தந்தை..! மடக்கி பிடித்த போலீசார்...! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 வயது சிறுமியை  கடத்திச் சென்று குடும்பம் நடத்தி வந்த மூன்று குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் 14 வயதுடைய 8ஆம் வகுப்பு மாணவி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர்.  ஆனால் சிறுமி எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்து மூன்று குழந்தைகளின் தந்தையும் மாயமானது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், அந்நபரின் செல்போன் எண் சிக்னல் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். இதில் அவர்கள் நாகப்பட்டினத்தில் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் நாகப்பட்டினத்திற்கு விரைந்த போலீசார், சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த மூன்று குழந்தைகளின் தந்தையை பிடித்தனர். மேலும் சிறுமியை மீட்ட போலீசார் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மூன்று குழந்தைகளின் தந்தை சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொலை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மூன்று குழந்தைகளின் தந்தையை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father of 3 children who kidnapped a 14 year old girl and started a family in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->