கனிமொழியிடம் நான் பேசியது ஷர்மிளாவுக்கு பிடிக்கவில்லை.. பெண் பயிற்சி நடத்துனர் குற்றச்சாட்டு..!!
Female conductor alleges sharmila did not like I spoke to Kanimozhi
கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக தனியார் பேருந்தில் பணியாற்றி வருகிறார். இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் செல்லக்கூடிய தனியார் பேருந்தை இயக்கி வருகிறார். இவரை அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள், சக ஓட்டுநனர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஷர்மிளா இயக்கி வரும் தனியார் பேருந்தில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி இன்று பயணம் செய்தார். இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி பயணம் செய்த போது பயிற்சி நடத்தினருக்கும் ஓட்டுனர் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பயிற்சி நடத்தினர் பேருந்து உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஓட்டுனர் ஷர்மிளாவை அழைத்து பேசிய பேருந்து உரிமையாளரிடமும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஷர்மிளா தான் வேலைக்கு வரவில்லை என கூறிவிட்டு சென்றுள்ளார்.
இது குறித்து பல்வேறு வதந்திகள் தற்பொழுது பரவி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பயிற்சிப் பெண் நடத்தினர் கூறியதாவது "திமுக எம்.பி கனிமொழியிடம் டிக்கெட்டிற்கு பணம் கேட்டேன். ஆனால் ஷர்மிளா தான் தருவதாக கூறினார். இருப்பினும் தன் உதவியாளர் தருவார் என கனிமொழி சொன்னார். பிறகு கனிமொழியின் உதவியாளர் ஐந்து நபர்களுக்கு டிக்கெட் பெற்றுக் கொண்டார். நான் கனிமொழியிடம் நான் பேசியது ஷர்மிளாவுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். அதனால் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கலாம்" என குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Female conductor alleges sharmila did not like I spoke to Kanimozhi