பெண் டி.எஸ்.பி. தாக்குதல் விவகாரம் : 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம்!
Female DSP Attack issue Prevention of violence against 8 people
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்த காளிக்குமார் என்பவர் மினிவேன் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த நிலையில், இவர் பணம் கொடுக்கல் வாங்கல், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காளிக்குமார் கொலை சம்பவத்தை கண்டித்தும் இக்கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி அருப்புக்கோட்டை - திருச்சுழி சாலையில் அவரின் உறவினர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காயத்ரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் திடீரென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காயத்ரியின் தலைமுடியை இழுத்து அவரை தாக்க முற்பட்டார்.
இதை தடுக்க முயன்ற பிற போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலான நிலையில், இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து, விருதுநகர் மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு 7 பேரை கைது செய்து, தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காயத்ரி மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது பெண்கள் எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 9 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
English Summary
Female DSP Attack issue Prevention of violence against 8 people