#BREAKING || கரையை கடக்க தொடங்கியது புயல்!
Fengal cyclone heavy rain alert now
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்க தொடங்கியுள்ளதால் அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டது. மணிக்கு அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும். அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் புயல் முழுமையாக கரையை கடக்கும்.
மாலை 5.30 மணிக்கு புயல் கரையை கடக்க தொடங்கியதாகவும், இன்று 10 மாவட்டங்களில், இரவு 10 மணி வரை கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
Fengal cyclone heavy rain alert now