திருவாரூர்.! 15 வயது சிறுமி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருவாரூரில் 15 வயது சிறுமி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மணியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது 15 வயது மகள் நன்னிலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் சம்பவத்தன்று அருகில் இருந்த வீட்டிற்கு சென்று மருதாணி பறித்துவிட்டு கால தாமதமாக வீட்டிற்கு வந்ததால் மகளை, தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சிமருந்து குடித்துள்ளார். இதையடுத்து உடனே அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fifteen years old girl commits suicide by drinking poison in thiruvarur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->