காஞ்சிபுரம் மாவட்டம்! கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து.!
Fire at a car spare parts factory in oragadam
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை பணியை முடித்து விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்ற நிலையில் தொழிற்சாலையின் உற்பத்தி பொருட்களை சேகரித்து வைக்கும் குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீயானது மளமளவென பற்றி கொழுந்துவிட்டு எரிந்து உள்ளது. இதையடுத்து தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்குப் பின்பு தீயை அணைத்தனர்.
தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து ஒரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Fire at a car spare parts factory in oragadam