திருச்சி காந்தி மார்கெட்டில் திடீர் தீவிபத்து... 5க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதம்...! - Seithipunal
Seithipunal


காந்தி மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது.

திருச்சி காந்தி மார்க்கெட் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. இங்கிருந்து பல மாவட்டங்களுக்கு காய்கறிகள் மற்ற பொருட்களும் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் இன்று அதிகாலை 7 மணி அளவில் மார்க்கெட்டில் வெளிப்புறத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் சிலிண்டர் கசிவால் தீப்பிடித்து எரிந்தது. மளமளவென அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தால் கடைகளில் இருந்த மின்சாதன பொருட்கள் மேசை நாற்காலிகள் உள்ளிட்டவை எரிந்து நாசமாயின. மேலும், டீக்கடையில் தேடி அறிந்து கொண்டிருந்த மாநகராட்சி பெண் ஊழியர் ஒருவரும் அந்த கடையில் டீ மாஸ்டர் இருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire at Trichy Gandhi Market


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->