விருதுநகர் || வெடி விபத்து - பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து.!
firecrackers factory lisence cancel temprory
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே நாக்பூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்று இயங்கி வந்த இந்த பட்டாசு ஆலையில், கடந்த வியாழக்கிழமை வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஆலையை விதிமீறி குத்தகைக்கு விட்டது, கூடுதல் பணியாளர்களை கொண்டு மரத்தடியில் வைத்து பட்டாசு உற்பத்தி செய்தது, கடந்த ஓராண்டாக பட்டாசு ஆலை செயல்படாமல் இருந்தது, அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலான அளவு வெடி மருந்துகளை கையாண்டது, தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் பேன்சி ரக பட்டாசு உற்பத்தி செய்தது உள்ளிட்ட விதிமீறல்களால் விபத்து நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில், பட்டாசு அலையின் உரிமம் 2026ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
firecrackers factory lisence cancel temprory