பயணிகளே உஷார்.. தெரியாம கூட இதை பண்ணிடாதீங்க.! மக்களுக்கு எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


அடுத்த வாரம் 24 தேதி வரும் தீபாவளி பண்டிகைக்காக, வெளியூர்களில் இருந்து தன் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று ரயில்வே பாதுகாப்புப் படை சென்னை கோட்ட முதுநிலை ஆணையர் செந்தில்குமரேசன் அறிவுறுத்தியுள்ளார். 

இதனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல ரயில்வே பாதுகாப்புப் படை தடை விதித்துள்ளது.

இந்தத் தடையை மீறுபவர்களை ரயில்வே சட்டப்பிரிவு 164-ன்கீழ் கைது செய்து, ரூ.1,000 அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து சில முக்கிய ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், நேற்று சென்னை ரயில்வே கோட்டம் சார்பில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ், ரயில்வே பாதுகாப்புப் படை சென்னை கோட்ட முதுநிலை ஆணையர் செந்தில்குமரேசன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

அதன் பின்னர் ரயில்வே பாதுகாப்புப் படை சென்னை கோட்ட முதுநிலை ஆணையர் செந்தில்குமரேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: "தினந்தோறும் அதிக மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இதனால், ரயில் பயணிகளின் பாதுகாப்பு மிக அவசியமாகிறது. எனவே, ரயில் பயணிகள் ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். 

இதையடுத்து, சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்வது, நடைமேடையில் கால்களை உரசிச் செல்வது, கூரைமீது பயணம் செய்வது, கல்லூரி மாணவர்கள் இடையே மோதல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றைத் தடுக்கும் வகையில், தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது" என்று சென்னை கோட்ட முதுநிலை ஆணையர் செந்தில்குமரேசன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

firecracks not allowed in train for deepavali festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->