பணியை தொடங்கினார் முதல் பெண் ஓதுவார்...!
first woman othuvar interview
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் சுஹாஞ்சனா என்ற பெண்ணும் அடங்குவார். இவர் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஓதுவராக நியமிக்கபட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் பணியை தொடங்கினார். இந்த பணிகுறித்து சுஹாஞ்சனா தெரிவிக்கையில், சிறுவயதில் இருந்தே தேவாரம், திருவாசகம் பாடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. இதற்கான இசைப்பள்ளியில் பயின்றேன். படிக்கும் போதே மிகுந்த ஈடுபாடுடன் பயின்றேன்.
பெண்கள் ஒதுவராக பணியாற்ற முடியும் என்பதால் இந்த பணிக்கு விண்ணப்பித்தேன். பணி நியமன ஆணை பெற்று பணியில் சேர்ந்திதுள்ளேன். இறைவனுக்காக பாடும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் இந்த பணியை விரும்பி ஏற்றதாகவும் கூறினார்.
அவர் ஓதுவாரக பணியில் ஈடுப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
first woman othuvar interview