நேற்று ஒரே நாளில் பிடிபட்ட ரூ. 8 கோடி மதிப்பிலான மீன்கள் - மீனவர்கள் உற்சாகம்!!
Fishermen Are Happy That They Got Rs 8 Cr Worth Fishes In a Day
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை மொத்தம் 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். தமிழக கடல்களில் இந்த இரண்டு மாத காலங்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு மீன்பிடித் தடைக்காலமானது ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரையிலான 61 நாட்களுக்கு கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து ஜூன் 14ம் தேதி இரவு 12 மணியுடன் மீன்பிடித் தடைக்காலம் முடிவுக்கு வந்ததையடுத்து ராமேஸ்வரத்தில் இருந்து 570 படகுகளில் சுமார் 4000 க்கும் அதிகமான மீனவர்கள் மிகவும் உற்சாகமாக கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் இன்று காலையில் கடலில் இருந்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மிக விலை உயர்ந்த மீன்களுடன் மிக உற்சாகமாக திரும்பியுள்ளனர். மேலும் இந்த மீன்கள் 200 கிலோ முதல் 450 கிலோ வரை படகுகளின் அளவைப் பொறுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
நேற்று ஒரே நாளில் மொத்தம் 8 கோடி ரூபாய் அளவிலான மீன்கள் பிடிபட்டதில் மீனவர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த மீன்களை வாங்கி செல்ல வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மீன் வியாபாரிகள் கடற்கரையில் வந்து குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Fishermen Are Happy That They Got Rs 8 Cr Worth Fishes In a Day