கடலில் கூட்டம் கூட்டமாக ஜிலேபி மீன்கள்! ஆச்சரியத்தில் மீனவர்கள்! - Seithipunal
Seithipunal


தேவிபட்டினம் கடற்கரை அருகே கடலில் வைகை ஆற்று ஜிலேபி மீன்களை கண்டு மீனவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெரும்பாலாக தமிழ்நாட்டில் ஆறு, ஏரி, குளங்கள், குட்டை உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் அதிகமாக கிடைக்கின்ற மீன் வகைகளில் ஒன்றானது ஜிலேபி மீன். இந்த மீன்  உப்பு தன்மை கொண்ட கடல் நீரில் வாழாது என்று கூறப்பட்டு வந்தது.

இந்தநிலையில்,  ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் மீனவர்கள் வங்காள விரிகுடா பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது மீன்பிடிப்பதற்காக கடலில் வலை விரித்துள்ளனர். வலையில் எக்கச்சக்கமான ஆறு குளங்களில் கிடைக்கும் ஜிலேபி சிக்கி இருப்பதைக் கண்டு மீனவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக கடல் மற்றும் கடலோர வாழ்வுத்துறை பேராசிரியர் முத்துசாமி ஆனந்த் என்பவர் தலைமையில் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது கடல் பாக் ஜெலசந்தி பகுதியில் ஆறுகளில் வளரும் ஜிலேபி மீன்கள் கூட்டம் கூட்டமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மீன்கள் தற்போது கடல் தண்ணீரில் இனப்பெருக்கம் செய்து உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

தன்னை சுற்றி உள்ள உப்பு நீர் பகுதிக்கு  ஏற்ப இந்த ஜிலேபி மீன்கள் தங்களை மாற்றிக் கொண்டு பழகி கடலில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை ஜிலேபி மீன்களை கடலில் இனப்பெருக்கத்தை அதிகரித்து வருவதால் அவை உண்ணக்கூடிய கடல்வாழ்  உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. வைகை ஆற்றில் இருந்து ஜிலேபி மீன்கள் கடலில் கலந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள்தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fishermen are surprised to find jalebi fish in the sea near Devipatnam beach in Vaigai river


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->