தொடர் மீனவர்கள் கைது! மத்திய,மாநில அரசை கண்டித்து மீனவர்கள் ஜூன் 5 ரயில் மறியல் போராட்டம்!
Fishermen condemning the central and state governments June 5 train picket protest
ராமநாதபுரம் : எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக மீனவர்கள் வருகின்ற 5ஆம் தேதி ரயில் மறியலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். தற்போது மேலும் 25 மீனவர்களை சிறைபிடித்து சிறையில் அடைத்தனர்.
25 மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அரசியலுக்கு கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். இலங்கை அரசை கண்டித்தும் கைதான மீனவர்களின் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் கைது கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் இன்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கை கடற்படையியல் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி வருகின்ற ஜூலை 5ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
English Summary
Fishermen condemning the central and state governments June 5 train picket protest