தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது மீன் பிடி தடைக்காலம்.!! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 2 மாதம் மீன்களின் உற்பத்திக்காக மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவது வழக்கம். இந்த காலக் கட்டத்தில் மீன்பிடித்தடை காலம் அமலில் இருப்பதால் மீன்களின் விலை கடுமையாக உயரும். 

அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். 

நாட்டுப் படகுகளை தவிர்த்து அனைத்து இயந்திர படகுகளும் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித்தலை காலம் தொடங்கியதால் தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக் கணக்கான விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. நாகப்பட்டினத்தில் சுமார் 700 விசைப்படகுகள் கடற்கரையில் மீன் பிடிக்க செல்லாமல் ஒதுங்கி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fishing ban came into effect in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->