தமிழகம் முழுவதும் 500 மதுபானக் கடைகளை மூட அரசு ஏற்பாடு - எப்போது தெரியுமா?
five hundrad tasmac close in tamilnadu
தமிழகம் முழுவதும் 500 கடைகளை மூட அரசு ஏற்பாடு - எப்போது தெரியுமா?
தமிழகத்தில் உள்ள உள்ள 5329 மதுபானக் கடைகள் மூலம் தமிழக அரசுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.44 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் சட்டசபையில் தமிழகம் முழுவதும் 500 மதுபானக் கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அறிவித்திருந்தார்.
அதனை செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதாவது, கோவில்கள் அருகில் இருக்கும் கடைகளை மூடுவது, 500 மீட்டர் சுற்றளவில் இரண்டு கடைகள் இருந்தால் அதில் ஒரு கடையை மூடுவது என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, "தமிழகம் முழுவதும் 500 கடைகளை கருணாநிதி பிறந்தநாளான அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் மூடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது" என்றுத் தெரிவித்தனர்.
English Summary
five hundrad tasmac close in tamilnadu