பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - ஆங்கில பாடத்திற்கு 5 மதிப்பெண்கள் போனஸ் - தேர்வுத்துறை உத்தரவு.!!
five marks bonous to tenth students english exam for wrong question
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - ஆங்கில பாடத்திற்கு 5 மதிப்பெண்கள் போனஸ் - தேர்வுத்துறை உத்தரவு.!!
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து பொதுத் தேர்வுகள் ஆரம்பமானது. இதில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 9.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதி உள்ளனர்.
இந்த தேர்விற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் மே 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆங்கில பாடத்திற்கு ஐந்து மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும்.
அதாவது தவறாக கேட்கப்பட்ட மூன்று ஒரு மதிப்பெண் 4, 5, 6 உள்ளிட்ட கேள்விகளுக்கும், ஒரு இரண்டு மதிப்பெண் 28-வது கேள்விக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது என்றுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
English Summary
five marks bonous to tenth students english exam for wrong question