மிரட்டிய மிக்ஜாம் புயல் - ஐந்து பேர் பலியான சோகம்.! - Seithipunal
Seithipunal


வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்றது. 'மிக்ஜாம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 100 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த நிலையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 

இதனால், பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலைக்கு உள்ளனர். இருப்பினும், இந்த கனமழைக்கு இதுவரை ஐந்து பேர் பலியாகி உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிடப்பட்ட அறிக்கையில், மின்சாரம் தாக்கி லோன் ஸ்கொயர் சாலையில் பத்மநாபன், துரைப்பாக்கத்தில் கணேசன் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். மரம் விழுந்ததில் பெசன்ட் நகரில் முருகன் என்பவர் பலியானார்.

மேலும், பட்டினம்பாக்கத்தில் அடையாளம் தெரியாத ஒருவரும், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய பகுதிகளிலும் அடையாளம் தெரியாத மற்றொருவரும் சாலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples died in mikjam strom in chennai


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->