நங்கநல்லூர் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


நங்கநல்லூரில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பாலி.!

சென்னை அருகே நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டியுள்ளனர்.

அப்போது, அர்ச்சகர் ஒருவர் குளத்தில் மூழ்கி உள்ளார். இதைப்பார்த்த சக அர்ச்சகர்கள் நான்கு பேர் அவரை காப்பாற்ற சென்றுள்ளனர். ஆனால், அவர்களும் அடுத்தடுத்து நீரில் மூழ்கியுள்ளனர். இதனால், தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே போலீசார் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவில் திருவிழாவில் ஐந்து அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்கட்ட விசாரணையில், அவர்கள் ராகவன், லோகேஷ்வரன், பானேஷ், சூர்யா உள்பட உயிரிழந்த 5 பேரும் தன்னார்வலர்கள் என்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five preists died kovil festival in chennai nanganallur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->