திருப்பூர் கொலை - 5 தனிப்படைகள் அமைத்து விசாரிக்க உத்தரவு.!
five squads formed for tirupur three peoples murder case
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் என்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:- பல்லடத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து 6 முதல் 7 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கூர்மையான ஆயுதத்தை கொண்டு மூன்று பேரையும் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை ஒருவர் செய்திருக்க வாய்ப்பில்லை.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தமிழகம் முழுவதும் வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
five squads formed for tirupur three peoples murder case