தவறான சிகிச்சையால் பறிபோன இளம்பெண்ணின் உயிர் - நாட்டு வைத்தியருக்கு 5 ஆண்டுகள் சிறை.!!
five years jail penalty to country doctor in thirunelveli
தவறான சிகிச்சையால் பறிபோன இளம்பெண்ணின் உயிர் - நாட்டு வைத்தியருக்கு 5 ஆண்டுகள் சிறை.!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முத்துவடிவேல்ராஜ் மகள் ஆறுமுக பாலா. இவர் தீராத கழுத்து வலியால் கடந்த ஒரு வருட காலமாக அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் அவரது பெற்றோர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு, தச்சநல்லூர் பகுதியில் உள்ள மாரியப்பன் என்னும் நாட்டு வைத்தியரிடம் தன் மகளை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நாட்டு வைத்தியர் மாரியப்பன் அளித்த சிகிச்சையில் ஆறுமுக பாலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆறுமுகபாலா, நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆறுமுக பாலா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து, நாட்டு வைத்தியர் மாரியப்பனைக் கைது செய்தனர்.
மேலும், போலீசார் இதுதொடர்பாக திருநெல்வேலி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை ஐந்து 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அபாயத்தில் 25 ஆயிரம் ரூபாயைப் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
English Summary
five years jail penalty to country doctor in thirunelveli