விமான சாகச நிகழ்ச்சி : அரை மணி நேரத்திற்கு மட்டுமே ஒரு ரயில்!...தெற்கு ரயில்வேயை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள  மெரினா கடற்கரையில் 'ஏர் ஷோ 2024' என்ற பெயரில்  முதல்முறையாக விமான சாகச நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்திய விமானப்படையின் 92-வது நிறுவன தினம் வரும் 8-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில்,  கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விமான சாகசத்தில், முதலாவதாக, ஆகாஷ் கங்கா குழுவினர், 2000 அடி உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

தொடர்ந்து எம்.ஐ.,17 ஹெ லிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சுகோய்-30 எம்.கே.ஐ., ரபேல், மிராஜ் 2000, மிக்-29 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போன்ற போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தது.

சேத்தக் ஹெலிகாப்டர்கள் மூவர்ண தேசியக்கொடியை பறக்கவிட்டப்படி வானை அதிர வைத்த நிலையில், தஞ்சையில் இருந்து புறப்பட்ட ரபேல் விமானங்கள் சென்னை மெரினா கடற்கரையை வலம் வந்தது. அதுமட்டுமல்லாமல் இடிமுழுக்கத்துடன் ரபேல் விமானங்கள் பறக்க பறக்க கடற்கரையில் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

இந்தநிலையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வேளச்சேரி ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிக் காணப்பட்டது. வேளச்சேரி, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை அட்டவணைப்படி அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டதால், ஏராளமானோர் முண்டியடித்துக்கொண்டு ஏறினார். 

மேலும் இளைஞர்கள் படியில் தொங்கியவாறே பயணித்ததால் பதற்றம் நிலவியது. இதனால் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர்.

தொடர்ந்து சாகச நிகழ்ச்சி முடிந்த உடன் மெரினாவில் இருந்து மக்கள் வெளியேறிய நிலையில், ரயில் நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், புறநகர் மின்சார ரெயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. இதனால் தெற்கு ரயில்வே முறையான சிறப்பு ரயில்களை இயக்கவில்லை என பொதுமக்கள் மற்றும் விமான சாகசத்தை காண  வந்தோர் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flight adventure train for only half an hour the public who bought the southern railway


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->